போலீஸ் ஸ்டேசனில்.. காதலனுக்காக கட்டிப்புரண்டு கள்ளக்காதலி சண்டை.. வாணியம்பாடியே வாயடைச்சு போச்சு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி போலீஸ் ஸ்டேசனில் இளைஞரின் மனைவி-கள்ளக்காதலி கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
குடும்ப சட்டைகள் எப்படியெல்லாம் நடக்கும், எப்படி எல்லாம் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் என்பதை யாராவது அறிய விரும்பினால் அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு போய் தாராளமாக பார்க்கலாம். கணவன் மனைவி சண்டை, கணவன் குடும்பத்திற்கும் மனைவி குடும்பத்திற்கும் சண்டை, பக்கத்து வீட்டு பெண்ணுடன் சண்டை, அத்தையுடன் சண்டை, நாத்தானாருடன் சண்டை என பட்டியல் நீண்டதாக இருக்கும்.

சிறுவயது திருமணங்கள், திருமணமான கொஞ்ச நாளிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை போட்டு அடிப்பது, அதேபோல் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது, மனைவி வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பது என சண்டைகள், சச்சரவுகள் அதிகமாக இருக்கும். மேலே சொன்ன அத்தனை பிரச்சனைகளையும் பார்க்க முடியும். சிலே நேரங்களில் ஸ்டேசனிலேயே சண்டையும் போட்டுக்கொள்வார்கள். அப்படியான சம்பவம் தான் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரை சேர்ந்த இளைஞர், அந்த நகரிலேயே செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கும் அவரது நண்பனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் கணவன்- மனைவியாக வசிக்க தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் அந்த இளைஞரின் தந்தை திடீரென இறந்துவிட்டார். இதனால் தந்தைக்கு இறுதிச்சடங்குகள் செய்ய செல்போன் கடை வைத்திருந்த இளைஞர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது முதல் மனைவி அவரை மீண்டும் பிரிந்து செல்ல விடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று விட்டார். தனது கணவனுடன் கள்ளக்காதலிக்கு தெரியாமல் மனைவி வெளியேறிவிட்டார்.
இதனிடையே கள்ளக்காதலி தனது காதலனை பார்த்து, இந்த நான்கு வருடத்தில் உனக்கு 5 லட்சம் ரூபாய், மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளேன். இவை அனைத்தையும் கொடுத்துவிடு என்று கூறியவர், திடீரென நீ என்னுடன்தான் வாழ வேண்டும் என கூச்சலிட்டார். கள்ளக்காதல் சண்டையால் வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதை யாரோ கூறியதால் கண்டுபிடித்துவிட்டார். அங்கு சென்ற கள்ளக்காதலி, இளைஞர் வசித்து வந்த வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து புகார் அளிப்பதற்காக அந்த இளைஞர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் புகார் அளிக்க வந்திருப்பதை அறிந்த கள்ளக்காதலி போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று செல்போன் கடை உரிமையாளரான இளைஞரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்போன் கடை உரிமையாளரின மனைவி, கள்ளக்காதலியை கடுமையாக தாக்கினார். தொடர்ந்து போலீஸ் ஸ்டேசன் என்று கூட பார்க்காமல் இரண்டு பெண்களும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அவர்களை சமாதானம் செய்ய சென்ற போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலைய பெண் போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி உள்ளார்கள்.
இதனிடையே கள்ளக்காதலி தனது காதலனை பார்த்து , இந்த நான்கு வருடத்தில் உனக்கு 5 லட்சம் ரூபாய், மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளேன். இவை அனைத்தையும் கொடுத்துவிடு என்று கூறியவர், திடீரென நீ என்னுடன்தான் வாழ வேண்டும் என கூச்சலிட்டார். கள்ளக்காதல் சண்டையால் வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. '
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications