தி.நகர் வணிக வளாக 4வது மாடியிலிருந்து குதித்து இளம் பெண் தற்கொலை.. காதலருடன் மோதலால்!
சென்னை தி.நகரில் உள்ள வணிக வளாகத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். காதலருடன் ஏற்பட்ட மோதலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை : சென்னை தி.நகர் ராஜாபாதர் தெருவில் இயங்கி வரும் வணிக வளாகத்தின் 4 வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் திடீரென குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண் ஷர்மிளா. இவருக்கு பேஸ்புக் மூலமாக விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஷர்மிளாவுக்கும் அவரது காதலர் விக்னேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஷர்மிளா தியாகராய நகர் ராஜபாதர் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 4வது மாடியில் இருந்து குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஷர்மிளா ரத்தவெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு திரண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளம் பெண் ஒருவர் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் பரவியதால் அங்கு ஏராளமானேர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications