காணாமல் போன ஹாஸ்டல் மாணவன்! மூடிய கிணற்றுக்குள் கிடந்த கோலம்.. எட்டிப் பார்த்தவர்களுக்கு செம ஷாக்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாயமான மர்மமான முறையில் பள்ளியில் அருகே பூட்டப்பட்டிருந்த கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் தேதி காலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து தங்களது பிள்ளை வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர். இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் என் மகன் உங்கள் பள்ளியில், மாணவர் விடுதியில் தான் படித்து வருகிறான். அப்படி இருக்க எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் நகர காவல்நிலையில் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படையை அமைத்து இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகப்பு மூடப்பட்ட நிலையில் உள்ள கிணற்றில் ஒரு மாணவன் உடல் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பத்தூர் நகர போலீசார் அந்த மாணவன் உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அது காணாமல் போன மாணவன் முகிலன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அம்மாணவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றின் மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம் கிடந்தது எப்படி, மாணவனின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் படித்த மாணவன் மாயமானதை விடுதி கண்காணிப்பாளர் கவனிக்கவில்லையா? என கேள்வி எழுப்பும் பெற்றோர், பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் உரிய விசாரணை நடத்தி தங்களது மகனின் சாவுக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் எனவும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க மூடிய கிணற்றுக்குள் மாணவனின் சடலம் விழுந்தது எப்படி? யாராவது மாணவனை அடித்துக் கொலை செய்து உடலில் கிணற்றில் போட்டார்களா? அல்லது கிணற்றில் முடியை திறந்து மாணவனே உள்ளே விழுந்து தற்கொலை செய்து கொண்டானா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவன் அதே பள்ளியின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications