For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் கலெக்டர் ஆபிசில் பரபரப்பு.. குடும்பத்தோடு பெண் துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர், குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால் துப்புரவு பணியாளர் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அருங்குணத்தைச் சேர்ந்தவர் சத்தியா. இவருக்கு ரங்கநாதன் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

 A cleaning worker tried to set on fire herself including children in Vilupuram collector office

சத்தியா துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் மற்றும் கணவருடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சத்யா, குடும்பத்தினருடன் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏறபட்டது. இதையடுத்து அவரை தடுத்து மீட்ட போலீசார் விசாரணை சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.

அதில் சத்தியாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை தெரியவந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் துணை தலைவர் சம்பளம் கொடுக்காமல் அவரை அலைக்கழிப்பதாகவும் சத்யா புகார் கூறினார். கஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

English summary
A cleaning worker tried to set on fire herself including children in Vilupuram collector office. She accused that union president is not giving salary for last three years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X