பருவநிலை மாற்றம் எதிரொலி: சாதாரண காய்ச்சலுக்கு கூட பயத்துடன் சிகிச்சை பெறும் மக்கள்
நெல்லை: நெல்லை பகுதியிலும் மாவட்டத்திலும் பருவ நிலை மாறி மாறி காணப்படுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் அடுத்தடுத்து 10 சிறுவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பகுதியில் அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் தங்கள் குழந்தைகளை நோய்களில் இருந்து காப்பாற்ற வெளியூரில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவ நிலை அடிக்கடி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
கொசு உற்பத்தி அதிகரிப்பால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலர் மர்ம காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது போல் திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 75 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications