கலாம் சாட் செயற்கைகோள் உருவாக்கிய கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம்... முதல்வர் அறிவிப்பு
கலாம் சாட் செயற்கைகோள் உருவாக்கிய கரூர் மாணவர் ரிஃபாத் ஷாரூக்கிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.
சென்னை: 64 கிராம் எடைகொண்ட சிறிய செயற்கைகோளை வடிவமைத்த கரூர் மாணவர் ரிஃபாத் ஷாரூக்கிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக். கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 750 என்றாலும் அவர் செய்த சாதனை அளப்பரியது.

நாசா நடத்திய போட்டியில் கலந்து கொண்ட இவர் சிறிய வடிவிலான செயற்கைக்கோளை வடிமைத்துள்ளார். 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.
240 நிமிடங்கள் மட்டுமே விண்ணில் இருக்கும் இந்த செயற்கைக் கோள் முப்பரிமாண கார்பன் ஃபைபரின் இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும். இம்மாணவனின் அறிவியல் திறன் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் இவர் வடிவமைத்த செயற்கைகோளை நேற்று அதிகாலை நாசா விண்ணில் செலுத்தியது. இதனால் அந்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இவரது சாதனைக்கு தமிழக சட்டசபையில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த மாணவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மாணவர் படிப்பில் சுமார் என்றாலும் அவரது படைப்புகளோ உலக விஞ்ஞானிகளையே அசர வைத்துவிட்டது. கலாம் கனவுதான் காணச் சொன்னார்.. ரிஃபாத் அந்தக் கனவை மெய்ப்பித்து விட்டார்.












Click it and Unblock the Notifications