ஆறு ஏரி குளங்களைப் பாதுகாக்க ரூ 300 கோடியில் குடிமராமத்து திட்டம்! - முதல்வர் அறிவிப்பு
சென்னை: குடிநீர் ஆதாரங்களான ஆறுகள், ஏரிகள், குளங்களைப் பாதுகாக்கவும், தூர் வாரவும் ரூ 300 கோடி செலவில் குடிமராமத்து திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
குடிமராமத்துத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை (பிப்.23) ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
பருவமழை தவறியதால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியைச் சமாளிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி வறட்சியை எதிர்கொள்ளவும், மழைநீரை திறம்படச் சேமித்தும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கென அரசிலிருந்து ஓய்வு பெற்ற பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கப்படும். நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பேரியக்கத்தின் ஒருபகுதியாக முதல் கட்டமாக பண்டைய குடிமராமத்து திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குடிமராமத்து என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை நிர்வகித்தலாகும்.
நேரடி நியமனம்: குடிமராமத்துத் திட்டத்தில் வரத்து வாய்க்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள், பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல், கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தப் பணிகளில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் விவசாயச் சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர், ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணிகள் பொதுப்பணித் துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டு மக்களால் செயல்படுத்தப்படும். பணிகள் அனைத்தும் பொதுப்பணித் துறையால் கண்காணிக்கப்படும். ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணிகள், நீர்வள ஆதாரத் துறையின் மூலம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
குடிமராமத்துத் திட்டம் மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்படும். பெரும்பாலான பணிகளும் ரூ.10 லட்சத்துக்குக் குறைவான மதிப்பீடு என்பதால் பயனாளிகளால் நேரடியாக ஒரே நாளில் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும்.
வரும் நிதியாண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்துப் பணிகள் நபார்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் இதுபோன்ற பணிகள் ரூ.300 கோடி செலவில் ஏப்ரல்-மே மாதங்களில் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்படும்.
இந்தப் பணிகளுக்கு மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு திட்டத்தைத் தொடங்கி நடைமுறைப்படுத்துவர்.
பொது மக்களும் பங்கேற்கலாம்!
குடிமராமத்துத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வரும் வல்லுநர்கள், பொறியாளர்கள், தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து அரசு செயல்பட உள்ளது.
இதற்கான திட்டங்களையும், உத்திகளையும், வழிமுறைகளையும், கொள்கைகளையும் இந்தக் குழு மூலம் வரையறுத்து அதை தமிழக அரசு உரியவாறு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழுவானது தன்னார்வத்துடன் பங்கு கொள்ள தயாராக உள்ள பொது மக்கள், வல்லுநர்கள், பொறியாளர்கள், அரசுக்கு வெளியில் உள்ள ஆர்வமுள்ள வல்லுநர்களின் அனுபவத்தையும், திறமையையும் நீர்வள ஆதார மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பாகவும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications