ஜனாதிபதி தேர்தல்.. பாஜக வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற வருகிற ஜூலை மாத இறுதியில் நிறைவடையவுள்ளது. இதையொட்டி ஜூலை மாதம் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

பாஜக சார்பில் பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆந்திரா, தெலுங்கான, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆதரவு கோரினார். இதனிடையே மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவு கேட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்திற்கு பின்னர், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதேநேரம் டிடிவி தினகரன் ஆதவு எம்எல்ஏக்கள் எடப்பாடியின் முடிவுக்கு கட்டுப்படுவார்களா அல்லது யாருக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. இதனால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications