காவிரி வாரியத்திற்காக உண்ணாவிரதம்... திடீரென உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்!
காவிரிக்காக அதிமுக இன்று நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து திடீரென முதல்வரும் , துணை முதல்வரும் பங்கேற்றனர்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் 19 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மத்திய அரசு பிடிகொடுக்கவில்லை.
இதனால் காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்.3-ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

மாவட்ட தலைநகரங்களில்...
மாவட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் என 32 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை கூறியிருந்தது. மேலும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வோர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் பெயர்கள் இல்லாததால் அவர்கள் இருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்பட்டது.

மூத்த நிர்வாகிகள் பங்கேற்பு
இந்நிலையில் சேப்பாக்கத்தில் அதிமுக இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கியது. இதில் கோகுல இந்திரா, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு
இதையடுத்து அதிமுக சார்பில் போடப்பட்ட உண்ணாவிரத பந்தலில் திடீரென காலை 8 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து அமர்ந்தார். அவரது பெயர் நிர்வாகிகள் பட்டியலில் இல்லாத நிலையில் அவர் பங்கேற்றது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறிது நேரத்தில் துணை முத்லவர் ஓ. பன்னீர் செல்வமும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்தார்.

உண்ணாவிரதம்
இருவரும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. சென்னையில் 5000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்டதால் ஏராளமான நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். மேலும் அதிமுக தொண்டர்களும் நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு சென்றனர். இதனையடுத்து மாலை 5.30 மணியளவில் உண்ணாவிரதத்தை பழரசம் அருந்தி இருவரும் முடித்துவைத்தனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications