தங்கமணி-ஓ.பிஎஸ்-நாளை எடப்பாடி...மோடியுடனான சந்திப்புகள்...ஒத்த பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையே!
டெல்லி சென்று பிரதமரை அடுத்தடுத்து முதல்வர், அமைச்சர்கள், ஓ.பிஎஸ் என போட்டி போட்டுக் கொண்டு பார்த்தாலும் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்பட வில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சென்னை: அதிமுக பிளவுபட்டபிறகு மத்திய அரசுடன் யார் நெருக்கம் என்பதை நிரூபிப்பதற்காக மாறி மாறி சந்திக்கும் பிரதமரை சந்தித்து வருகின்றனர், ஆனால் இவர்கள் சந்திப்பால் தமிழக பிரச்னைகள் எதற்கும் தீர்வு எட்டப்பட்டதாகத் தான் தெரியவில்லை.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசுக்கு இருந்த கெத்து காணாமல் போய் விட்டது என்றே சொல்லலாம். அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதால் விரக்தியில் ஓபிஎஸ் தனி அணியை உருவாக்க, சசி சிறை சென்றதும், தினகரன் அவருக்குப் பின் ஈபிஎஸ் என்று அதிமுக அம்மா அணி 2 கைகள் மாறி தற்போது கட்சி என்ற பந்து முதல்வர் ஈபிஎஸ் கையில் உள்ளது.
தொடக்கத்தில் சசிஅணியை ஒபிஎஸ் எதிர்த்து நின்றதற்கு பாஜகவின் பின்பலம் காரணம், அவர்கள் கொடுக்கும் தைரியத்தில் தான் ஓபிஎஸ் நெஞ்சம் நிமிர்த்த நிற்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் நிலைமையை சுதாரித்துக் கொண்ட முதல்வர் ஈபிஎஸ் ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் திட்டமான உதய் மின் திட்டத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்தனர்.
இதே போன்று தமிழகத்தில் செயல்படுத்தும் மத்திய அரசின் திட்டங்களை பட்டியல் எடுக்குமாறு மாவட்டங்களுக்கு உத்தரவிட்டது என்று அடுத்தடுத்த ஆதரவு போக்கு கடைசியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அருகில் முதல்வர் பழனிச்சாமி இருந்தாலும் கடமைக்கென்று 5 நிமிடங்கள் பேச மிச்ச 45 நிமிடங்கள் வெங்கய்ய நாயுடுவே பேசியதை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கவனிக்கத் தவறவில்லை.

2 முறை சந்திப்பு
முதல்வராக ஈபிஎஸ் பொறுப்பேற்றவுடன் முதன்முறையாக பிப்ரவரி 24ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின் போது பிரதமரை சந்தித்து தனியாக பேசினார் இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 27ம் தேதி டெல்லி சென்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அதற்கு பரிசீலிப்பதாக மத்திய அரசு பதில் அளித்ததாக கூறினார்.

சாமர்த்தியம் போதவில்லையா?
இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தின் போதும் பிரதமரை சந்தித்து வந்தார் ஈபிஎஸ், அதிமுக அரசு ஓராண்டு நிறைவடையும் சூழலில் நாளை டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார் பிரதமர மோடி. விவாசயிகள் போராட்டம், காவிரிநீர் பிரச்னை என்று எதிலும் தமிழகத்தை பற்றி அலட்டிக் கொள்ளாத மத்திய அரசு ஆயிரத்து 748 கோடியை மட்டும் நிதியாக மத்தியஅரசு அறிவித்தது. முதல்வராக பதவியேற்ற 4 மாதத்தில் இது வரை 2 முறை பிரதமரை சந்தித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி ஆனால் இது வரை தமிழகத்திற்கு சாதகமாக எதையும் செய்து கொள்ள மத்திய அரசை எச்சரிக்கும் மனப்போக்கு அவருக்கு இல்லை என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தங்கமணி, வேலுமணி
முதல்வர் பழனிச்சாமிக்கு அடுத்தபடியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது அமைச்சர் தங்கமணி என்று கூறப்படுகிறது. இதனால் தான் கடந்த 2 மாத்தில் மட்டும் அடுத்தடுத்து 2 முறை பிரதமரை இவர் சந்தித்துள்ளாராம். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தற்போதைய முதல்வர் ஈபிஎஸ் என்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களை பிரதமர் சந்திக்கிறார் என்றால் அது தமிழக பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு மாநில அமைச்சரை அடுத்தடுத்து இரண்டு முறை பிரதமர் சந்தித்தது அரசியலில் புகைச்சலை கிளப்பியது. இதே போன்று உள்ளாட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் வேலுமணி, டெல்லியில் முகாமிட்டு அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்தாக சொல்லப்படுகிறது.

ஓ.பிஎஸ் சாதித்தாரா?
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரதமரை சந்தித்தார். தமிழகத்தில் தீவிரமாக போராட்டம் வெடித்ததால் சட்டம் இயற்ற மோடி அறிவுறுத்தியதன் பேரில் ஜல்லிக்கட்டு போராட்டம். இப்போது வரை ஓபிஎஸ் அணி அவரது நிர்வாகத் திறனுக்கு உதாணமாக சொல்வது இதைத் தான். ஆனால் அதற்குப் பிறகு இரண்டு முறை பிரதமரை ஓபிஎஸ் சந்தித்து விட்டார். இதைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் வறட்சி நிவாரணம் கோரி சந்திப்பு, 3 தினங்களுக்கு முன்பு தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன் என்று ஓபிஎஸ சொன்ன போதும் எந்த பப்பும் வேகவில்லை. ஏனென்றால் இந்த சந்திப்பால் எந்த நல்லதும் தமிழகத்திற்கு நடக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

கெத்து ஜெயலலிதா
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது டெல்லி செல்வதென்றால் அது அனைவராலும் உற்று பார்க்கப்படும் அத்தி பூத்தாற் போன்ற டெல்லி பயணமாக இருந்தாலும் ஒரே சந்திப்பில் பத்து கோரிக்கை லிஸ்ட்டை கொடுத்து அதில் ஏதாவது ஒன்றை இப்போதே நிறைவேற்ற வேண்டும் என்று அசால்ட்டாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பார். மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து இப்படித் தான் செய்வேன் முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டும் தொனியும் இருக்கும், ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அதிமுக சகாக்கள் மாறி மாறி போட்டி போட்டு பிரதமரை சந்தித்து ஃப்ரெண்ட்ஷிப்பை மட்டுமே உறுதிபடுத்திகின்றனர். இவர்கள் சந்திப்புகளால் ஒர பிரயோஜனமம் இல்லையே என்பது தான் அரசியல் அறிந்த அனுதாபிகளின் ஆதங்கமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications