லீவு நாளிலும் தீயாய் வேலை பார்க்கும் ஓ.பன்னீர் செல்வம்... சுறுசுறு ஆலோசனை
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று விடுமுறை நாளிலும் கூட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மும்முரமாக ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுமுறை தினமான இன்றும் கூட தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளைப் பார்த்ததால் தலைமைச் செயலக ஊழியர்கள் வியப்படைந்தனர்.
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் இன்று பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் நடத்தினார். மக்கள் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறும் அவர் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டாராம்.

வர்தா புயல் நிவாரணப் பணிகள்தான் தற்போது தமிழக அரசின் முக்கிய பணியாக உள்ளது. இன்னும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் முழு அளவில் இயல்பு நிலை திரும்பவில்லை. தொலைபேசி இணைப்புகள் இன்னும் கூட முழுமையாக சரியாகவில்லை. பல இடங்களில் மரங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
பல பகுதிகளில் இன்னும் கூட குப்பைகள், மரக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பல இடங்களில் தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் இன்னும் கூட சரியாகாத நிலை உள்ளது.
இந்த நிலையில் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டியிருந்தார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணி நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநான் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு பணிகள் குறித்து முதல்வர் பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவை:
முதல்வர் திறக்க வேண்டிய கட்டடங்கள், துவக்க வேண்டிய திட்டங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்.
கட்டடங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த முழு தகவல்கள் மற்றும் அதன் புகைப்படமும் அனுப்ப வேண்டும்.
காணொலி காட்சி மூலம் துவக்கப்படும் திட்டமாக இருந்தால் அது பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
புதிதாக கட்டப்பட வேண்டிய பாலங்கள், திட்டங்கள் குறித்த அறிக்கைகளையும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவிகள் பற்றிய விவரங்களையும் விரிவாக அனுப்ப வேண்டும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications