என் மகளை முதல்வர் விடுவிப்பார் - நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் நம்பிக்கை
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியை முதல்வர் விடுதலை செய்வார் என நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் கூறினார்.
சென்னை: சிறையில் இருந்து எனது மகளை முதல்வர் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நளினியும் ஒருவர். அந்த கொலையின் பின்னணி பற்றியும், வழக்கு விசாரணை குறித்தும், வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி-பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்தும்பரபரப்பான தகவல்கள் அடங்கிய நளினியின் சுயசரிதை புத்தகம் "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்" என்ற தலைப்பில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனியில் நடந்தது. புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, அதன் முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்த வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓவியர் வீரசந்தானம், தியாகு, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள், கடந்த 26 ஆண்டுகளாக எனது மகள் நளினி சிறையில் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார். என் மகள் நளினியை முதல்வர் விடுவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications