ஜெயலலிதா நலம்... விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் - ஒய்.எஸ். சௌத்ரி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.சௌத்ரி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகியுள்ள நிலையில், முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள் தினசரி சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஒய் எஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று சௌத்ரி வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌத்ரி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியை சந்தித்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.
முதல்வர் விரைவில் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். தற்போது வரை 95 சதவீதம் குணமடைந்துள்ளார் எனவும், 5 சதவீதம் மட்டும் குணமடைய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர் என்றார். மேலும், ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும் சௌத்ரி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications