ஆளுநராக பொறுப்பேற்க தமிழகம் வந்தார் வித்யாசாகர் ராவ்- முதல்வர் ஜெ., வரவேற்பு
சென்னை: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்க சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு அளித்துள்ளார்.
தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. புதிதாக ஆளுநர் எவரும் நியமிக்கப்படாத நிலையில் மகாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வித்யாசாகர் ராவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஆளுநராக பதவியேற்பதற்காக வித்யாசாகர் ராவ் சற்று முன் சென்னை வந்துள்ளார். அரசு முறைப்படி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு அளித்தார். அவருடன் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், டிஜிபி அசோக்குமார் ஆகியோர் உடனிருந்து வரவேற்பு அளித்தனர்.
வித்யாசாகர் வருகையினால் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையம் முதல் ராஜ்பவன் வரை பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக ஒருபுறம் நிறுத்தப்பட்டது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications