தோற்றுப் போனார் ஓ.பி.எஸ்... வெறும் கையுடன் சென்னை புறப்பட்டார்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினார்.
மதுரை: அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்புகிறார். மதுரையில் இருந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட அவர் எதுவும் பலன் தராமல் போனதால் சென்னை புறப்பட்டார்.
ஜல்லிக்கட்டு இன்று நடைபெறும். வாடி வாசல் திறக்கும், காளைகள் துள்ளிக் குதித்து வரும் என்று கூறியிருந்தார் முதல்வர். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் அதற்குத் தடை போட்டு விட்டனர். அவசரச் சட்டம் கண் துடைப்பு, ஏற்க மாட்டோம், நிரந்தரச் சட்டத்துடன் வாங்க, அதுவரை வராதீங்க என்று கூறி விட்டனர். நாலாபக்கமும் அலங்காநல்லூரைச் சுற்றிலும் மக்கள் குவிந்திருக்கின்றனர். கொந்தளிப்புடன் உள்ளனர்.

சமரச முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டன. ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசியும் கூட எதுவும் பலன் தரவில்லை. இதையடுத்து மீண்டும் சென்னை திரும்ப முதல்வர் முடிவு செய்தார். இதையடுத்து அவர் மதுரை விமான நிலையம் விரைந்த அவர் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.
ஜல்லிக்கட்டு நடத்தப்படும், நானே தொடங்கி வைப்பேன் என்று கூறிய முதல்வரால் அதை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. வெறும் கையுடன் தற்போது சென்னை திரும்புகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications