#வர்தா: 'அம்மா' பெயர் வைத்த புலிகள் இருக்கும் வண்டலூர் பூங்காவை பார்வையிட்ட ஓ.பி.எஸ்.
சென்னை: வர்தா புயலால் முற்றிலும் சேதம் அடைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவை முதலவர் ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை பாடி, மாத்தூர் பகுதிகளை பார்வையிட்டார் பன்னீர்செல்வம். வர்தா புயல் கரையை கடந்த பழவேற்காட்டுக்கும் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொன்னேரியில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்த பன்னீர்செல்வம் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து அவர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் வண்டலூர், கேளம்பாக்கம், மகாபலிபுரம், காஞ்சிபுரம் பகுதிகளில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
வர்தா புயலால் வண்டலூர் உயிரியல் பூங்கா முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அங்குள்ள மிருகங்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஏராளமான மரங்கள் விழுந்து கிடப்பதால் அதிகாரிகளால் பூங்காவிற்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவையும் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications