பானை வியாபாரியும் பகல் கனவும்... நாகையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை
நாகை எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பானை வியாபாரியின் பகல்கனவு எத்தகைய விளைவை ஏற்படுத்தியது என்று கூறினார்.
நாகப்பட்டினம்: ஆட்சி கலையவேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம் பகல்கனவாகவே முடியும் என்று நாகப்பட்டினம் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கதை சொல்லி விளக்கியுள்ளார்.
ஒரு ஊரில் ஒரு பானை வியாபாரி இருந்தார். அந்த வியாபாரிக்கு தினசரியும் 2 பானைக்கு மேல் விற்பனையாகாது

ஒருநாள் ஒருவர் மொத்தமாக 20 பானைகள் வேண்டும் என்று கேட்டு வந்தார். அதற்கு மகிழ்ந்த அந்த வியாபாரி பானையை ரெடி செய்யத் தொடங்கினார்.
சந்தோசமாக பானைகளை அடுக்கி வைத்தார். அப்படியே அவரது கற்பனை குதிரையை தட்டி விட்டார்.
இந்த 20 பானைகளை விற்று அதில் வரும் பணத்தில் கோழி வாங்க வேண்டும். அதை விற்று ஆடு வாங்க வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு கறவை மாடு வாங்க வேண்டும். அந்த மாடு கன்று போடும்,பால் தரும். அதில் வரும் லாபத்தை வைத்து வண்டி வாங்க வேண்டும்.
நல்ல விலைக்கு குதிரை ஒன்றையும் வாங்க வேண்டும். அந்த குதிரை குட்டி போடும். பின்னர் வசதி பெருகி விடும்.
திருமணம் செய்ய வேண்டும். குழந்தைகள் பிறக்கும். அந்த குழந்தைகள் பானை சட்டி செய்யும் போது களிமண்ணில் விளையாடும். அவர்களை நாம் விரட்டி விட வேண்டும் என்று பலவாறு யோசித்துக்கொண்டே காலை நீட்டினார் அந்த குயவர்.
அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் மொத்தமும் விழுந்து நொறுங்கியது. அப்போதுதான் அந்த குயவர் பகல் கனவு கண்டு மொத்தத்தையும் தொலைத்து விட்டோமே என்று கவலைப்பட்டார்.
இந்த மாதிரிதான் பலரும் தற்போது பகல் கனவு காண்பதாக கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி கலையவேண்டும் என்றும் அதை கலைக்க வேண்டும் என்றும் பகல் கனவு காண்பவர்களின் எண்ணம் பானை வியாபாரியின் கதை போலவே முடியும் என்று சொல்லாமல் சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி.
அது மட்டுமல்லாது யாரையும் அதிகம் விமர்சித்து பேச வேண்டாம் என்றும், இன்று நம்மை விட்டு விலகியிருப்பவர்கள் நாளை நம்மோடு வந்து இணைவார்கள் என்றும் தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications