Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க மு.க.ஸ்டாலின்தான் காரணமாம்!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் முறைதவறி நடந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நேர்ந்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் முறைத்தவறி நடந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வழிகோலியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

முதல்வராக பதவியேற்க இருந்தவேளையில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலாவால் அவரது ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி சட்டசபை அதிமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். ஆட்சி பொறுப்பேற்ற 15 நாள்களுக்குள் சட்டசபையில பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்தார்.

 ரகசிய வாக்கெடுப்பு...

ரகசிய வாக்கெடுப்பு...

பதவியேற்ற 3 நாட்களிலேயே சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வர் பழனிச்சாமி வாசித்தார். முன்னதாக, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

 சட்டசபையில் அமளி

சட்டசபையில் அமளி

இதைத் தொடர்ந்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 ஸ்டாலின்தான் காரணம்...

ஸ்டாலின்தான் காரணம்...

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டசபையில் மு.க.ஸ்டாலின் முறையற்று நடந்து கொண்டதால்தான் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

 முறைதவறிய மு.க. ஸ்டாலின்

முறைதவறிய மு.க. ஸ்டாலின்

இதுகுறித்து கும்பகோணத்தில் அவர் கூறுகையில், நெடுவாசல் போராட்டத்தை சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன. மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுகின்றன.

மத்திய அரசு செயல்படுத்தாது

மத்திய அரசு செயல்படுத்தாது

விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. சட்டசபையில் மு.க.ஸ்டாலின் முறை தவறி நடந்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க வழி வகுத்தது. எனவே இந்த பினாமி அரசு அமைவதற்கு மு.க.ஸ்டாலினும் ஒரு காரணம் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+