மீனவர்கள் கைது விவகாரம்.. பிரதமருக்கு மீண்டும் ஓ.பி.எஸ்.கடிதம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மீண்டும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும் 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் 109 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நேற்றும் பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.












Click it and Unblock the Notifications