வெள்ள நிவாரணத்திற்கு இதுவரை ரூ.339 கோடி அளித்த நிறுவனங்கள், தொழில் அதிபர்கள்: தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இன்று (நேற்று) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கப்பட்டன.
லார்சன் ஆண்டு டவ்ப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் ரூ.10 கோடியே 80 லட்சம் வழங்கினார். அதேபோல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆர். கோடீஸ்வரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.4 கோடியே 18 லட்சத்து 82 ஆயிரத்து 12 வழங்கினார்.
ஐ.டி.பி.ஐ. வங்கியின் முதன்மை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைவர் (தெற்கு) ரபிநாராயன் பாண்டா ரூ.1 கோடியே 25 லட்சம் வழங்கினார். அதேபோல் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) செயல் இயக்குனர் எஸ். கோபிநாத், பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.1 கோடியே 63 லட்சத்து 27 ஆயிரத்து 230 வழங்கினார்.
பாங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.ஏ. சங்கர நாராயணன் ரூ.1 கோடி வழங்கினார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் ரூ.18 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 242 முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (நேற்று) முதல்-அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications