ஜாக்பாட்.. 1 லட்சம் பேருக்கு ஓய்வூதிய பயன்கள்! புதுமை பெண் திட்டத்தில் ஆணை.. இன்று அசத்திய ஸ்டாலின்
சென்னை: சென்னையில் இன்று ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற ஈராண்டு சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டதோடு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். மேலும் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய பயன்களை வழங்கி, புதுமை பெண் மற்றும் நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகளையும் வழங்கினார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இந்த காலக்கட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். மேலும் பல துறைகளில் பணி நியமன ஆணைகளையும் வழங்கி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதாவது ‛ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி' என்ற தலைப்பில் 2 ஆண்டில் திமுக அரசு செய்த சாதனைகளின் விபரங்கள் அடங்கிய மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடவும், அதன்பிறகு 2 ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் 1 லட்சம் பயனாளிகளுக்கு இன்று ஓய்வூதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். அதோடு மட்டுமின்றி புதுமை பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 .30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது.

முதல்வர் ஸ்டாலன் ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி என்ற 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டு, புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்பிறகு ஓய்வூதிய பயன்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், ஆணைகளையும் வழங்கினார். அதன்பிறகு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சென்னை மேயர் பிரியா, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications