தீபாவளிக்கு முன்பு கிடைத்த "திடீர்" லீவு.. மாணவர்கள் உற்சாகம்..!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இன்று மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் செம உற்சாகமாக உள்ளனர். தீபாவளிக்கு முன்பு போய் பள்ளிக்கூடம் வைத்து விட்டார்களே என்ற கவலையில் இருந்த அவர்களுக்கு இன்று திடீரென மழை காரணமாக விடுமுறை கிடைத்ததால் தற்போது 4 நாள் விடுமுறையாக இது மாறி விட்டது.
சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த மழை சீசனில் கிடைத்துள்ள 2வது விடுமுறையாகும் இது. ஏற்கனவே ஒரு நாள் லீவு அவர்களுக்குக் கிடைத்திருந்தது.

அதேசமயம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கூடங்களுக்கு நடப்பு சீசனில் இன்று தான் முதல் முறையாக விடுமுறை கிடைத்துள்ளது. மழைக்காலம் தொடங்கியது முதல் அடடா நமக்கு லீவு கிடைக்கலையே என்று இந்த மாவட்ட பள்ளிக்கூட மாணவர்கள் "ஏக்கத்தில்" இருந்து வந்த்னர். ஆனால் மழை சரியாக பெய்யாத காரணத்தால் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் நாளை தீபாவளிப் பண்டிகை வரும் நிலையில் இன்று பள்ளிகள் இயங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு முன்பு லீவு கிடைக்காமல் போய் விட்டதே என்ற சோகத்தில் மாணவர்கள் காணப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இன்று கன மழை காரணமாக திடீர் விடுமுறை கிடைத்தது குஷியாகி விட்டது.
இருப்பினும் இந்த விடுமுறையை வெளியில் வந்து கொண்டாட முடியவில்லை. பட்டாசு வெடிக்க முடியவில்லை. வெளியில் சுற்றவும் முடியவில்லை. மாறாக வீட்டோடு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் பெரும்பாலான பகுதிகளில் இல்லாத காரணத்தால் டிவியும் பார்க்க முடியாத நிலை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications