கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயில்.. 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே.. செக் பண்ணுங்க
வேலூர்: கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நான்கு நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் காட்பாடியில் இருந்து கோவை வரை மட்டுமே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத பராமரிப்பு தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சென்னை செல்லும் 8 ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) ஜூலை 11,18,25 மற்றும், ஆகஸ்டு 1 செவ்வாய்கிழமைகளில் நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். அரக்கோணம், பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்கு ரயில் செல்லாது. மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து ரயில் (எண்:12679) இயக்கம் துவங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகள் தொடர் வலியுறுத்தலால், திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர ரயில் எண்:06044 இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்ததால் ரயில் இயக்கம் ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் வழியாக செல்லும். இந்த ரயிலில், 3 ஏசி., 9 படுக்கை வசதி, 5 பொது, 2 சரக்கு பெட்டி இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலம் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக, ரப்திசாஹர், ஹிம்சாகர், பாட்னா உட்பட 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை தெற்கு மத்திய ரயில்வே அதிகரித்துள்ளது.
எர்ணாகுளம் - பரூனி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஓங்கோல் - விஜயவாடா இடையே, சிரலா ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நிற்கும்.ஸ்ரீவைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நெல்லூர் - ரேணிகுண்டா இடையே குண்டூரில் 2 நிமிடங்கள் நிற்கும். எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் விஜயவாடா - வாரங்கல் இடையே கம்மம், வாரங்கல் - பெலம்பல்லி இடையே ராமகுண்டம் மற்றும் மன்சிர்யல் ஆகிய ஸ்டேஷன்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.இவை தவிர மேலும் 11 ரயில்கள் கூடுதலாக நின்று செல்லும் ஸ்டேஷன்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications