ரூ.2.43 லட்சம் மோசடி வழக்கு.. சுகேஷுக்கு ஆக. 17 வரை காவல் நீடிப்பு
ரூ.2.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் கோவை நீதிமன்றம் சுகேஷுக்கு ஆகஸ்டு 17 வரை காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை: இரட்டை இலை சின்னம் கிடைக்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திகார் சிறையில் உள்ள சுகேஷை ஆகஸ்டு 17 வரை நீதிமன்ற காவலில் வைக்கக் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கணபதி சிவசக்தி காலனியைச் சேர்ந்தவர் ராஜவேலு. பர்னிச்சர் கடை வைத்துள்ள இவரிடம், 2010-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம், பெல்லாரி மாநகராட்சியில் சமையலறை உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.43 லட்சம் மோசடி செய்த புகாரில் சுகேஷ் கைது செய்யப்பட்டார்.

மோசடி வழக்கில் ஆஜராகாத இருந்த சுகேஷுக்கு கோவை நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு சுகேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றம், சுகேஷுக்கு ஆகஸ்டு 17ம் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications