For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடுத்து வச்ச கொங்கு மக்கள்.. கோவையில் செம மழை.. பல இடங்களில் கரண்ட் கட்!

கோவையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையில் கொட்டி வரும் கோடை மழை-வீடியோ

    கோவை: கோவை மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது . இந்நிலையில் இன்று மாலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    coimbatore district has heavy rains

    இதனையடுத்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாநகரின் காந்திபுரம், அவினாசி சாலை, சிங்கநல்லலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது . அக்னி நட்சத்திர வெயில் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் குறைவாகவும், கோவையில் பலத்த மழை பெய்து வருவதாலும் , கோடை காலம் என்ற சூழல் இல்லாத நிலையில் கோவை மாவட்டம் தற்போது உள்ளது

    English summary
    Coimbatore district has heavy winds and thunderstorm heavy rains. The power supply was disconnected in various places. The heavy rains continued in the city, including the Gandhipuram, Avinashi Road, Singanallallur and Ramanathapuram in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X