Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜ போலீஸ் பாதுகாப்பு கேட்ட போலி டிஐஜி: ஜவுளிக்கடையில் ‘சுருட்ட’ முயன்ற போது சிக்கினான்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ஜவுளிக்கடையில் துணிகளை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜியையும் அவரது பெண் தோழியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஐஜியாக நடித்த நபரின் பெயர் சண்முகதுரை என்பதாகும். இவர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். போலீஸூக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு, டிஐஜி என நடித்து, முறைகேடாக பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது. அவருடன் இருந்த பெண், சென்னையைச் சேர்ந்த மீனாகுமாரி (50), கணவரைப் பிரிந்து, சண்முகதுரையுடன் வாழ்ந்து வருகிறார்.

பி.ஏ. பட்டதாரியான சண்முகதுரை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டிஐஜியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவரின் பெயரைப் பயன்படுத்தி, பல இடங்களில் சோதனை என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவருக்கு உடந்தையாக மீனாகுமாரியும் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கோவை சரவணம்பட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு ஞாயிறன்று செல்போனில் பேசிய சண்முகதுரை, மத்திய கலால் டிஐஜி ராஜேந்திரன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கோவையில் ஒரு சில கடைகளில் சோதனை நடத்த வேண்டும். அதற்கு, போலீஸ் படையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் இன்ஸ்பெக்டரிடம் கேட்டுள்ளார்.

Coimbatore: Fake DIG runs out of luck, arrested

இதனையடுத்து இரு காவல் உதவி ஆய்வாளர்கள், இரு காவலர்கள் என நான்கு பேரை இன்ஸ்பெக்டர் ஜோதி அனுப்பி வைத்துள்ளார். அவர்களை காந்திபுரம் பகுதிக்கு வருமாறு போலி டிஐஜி என்ற கூறியுள்ளார். இதையடுத்து, அவரை சந்தித்த போலீஸார் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்துள்ளனர்.

போலீசாருடன் காந்திபுரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்ற சண்முகதுரை, துணிகளை வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. அவரது பேச்சில் சந்தேகமடைந்த கடை நிர்வாகத்தினர், அவர் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். அதற்கு சண்முகதுரை கோபத்துடன், ‘என்னிடமே கேள்வி கேட்கிறீர்களா, நான் யார் தெரியுமா டிஐஜி' எனக் கூறி, அவர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, சரவணம்பட்டி போலீஸாரும் உடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் நடவடிக்கை தொடர்பாக உடன் இருந்த போலீஸார், இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, டிஐஜி என்ற கூறிய சண்முகதுரையின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை சந்தேகத்தின்பேரில் போலீஸார் கேட்டுள்ளனர். தொடர்ந்து, அவர் மழுப்பவே, அவரையும் உடன் இருந்த பெண்ணையும், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் போலி டிஐஜி என்று தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீதும் கூட்டுச்சதி, மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். டிஐஜி என்ற பெயரில் பேசியவுடன் எதையும் விசாரிக்காமல் உடனடியாக போலீஸை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர் ஜோதியின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+