For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை கல்லூரி பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.. பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்

கோவை மாணவி பலியானது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை மாணவியின் உயிரை பறித்த பேரிடர் பயிற்சியாளர்.

    கோவை: கோவை மாணவி பலியானது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது.

    தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளார்.

    Coimbatore Girl Death: We have no connection with Kovai issue says National Disaster Management board

    இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு இருக்கிறார். மாடியில் இருந்து கீழ் விழும் போது மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார்.

    கோவையில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. மாணவி பலியானது வருத்தமளிக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

    பயிற்சி அளித்தவர் எங்கள் ஆணையத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் எங்களிடம் பயிற்சி பெறவே இல்லை. இந்த பயிற்சி எங்களிடம் அனுமதி பெற்று செய்யப்பட்டது கிடையாது. அவர்கள் எங்கள் ஆணையத்தில் வேலை பார்க்கவில்லை என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    பயிற்சி அளித்தவர் எங்கள் ஆணையத்தை சேர்ந்தவர் இல்லை.அவர் எங்களிடம் பயிற்சி பெறவே இல்லை. இந்த பயிற்சி எங்களிடம் அனுமதி பெற்று செய்யப்பட்டது கிடையாது. அவர்கள் எங்கள் ஆணையத்தில் வேலை பார்க்கவில்லை என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    Coimbatore Girl Death: Arrested trainee has not belonged to National Disaster Management team.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X