பாரா சைலிங் விபத்து.. ஜகா வாங்கும் கோவை மருத்துவ கல்லூரி.. எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்கிறது
கோவை: கோவை, மருத்துவக் கல்லுாரி பொன்விழாவை முன்னிட்டு, 5ம் தேதியில் இருந்து, பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மைய, கோவை கிளை தலைவர் பாபு, மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி அளித்துள்ளார்.
இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மைய, கோவை கிளை தலைவர் பாபு, மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி அளித்துள்ளார்.
நேற்று மதியம், 12:00 மணியளவில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த மல்லேஸ்வர ராவ் (53) பயிற்சியில் பங்கேற்றார். பாராசூட் சுமார் 60 அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென பெல்ட் அறுந்தது. இதில் கீழே விழுந்து அவர் இறந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் இருந்து தங்களை தூர நிறுத்திக்கொண்டுள்ளது கோவை மருத்துவ கல்லூரி.
கோவை, அரசு மருத்துவமனை, 'டீன்' எட்வின் ஜோ அளித்த பேட்டியில் இது தெளிவாக தெரிந்தது. "மருத்துவக் கல்லுாரி மைதானத்தில், பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கடந்த, 5ம் தேதி, அதிக காற்று வீசியதால், ஒரே நாளில் பயிற்சி முடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, கொடிசியா மைதானத்தில் நடந்த பயிற்சிக்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் அனுமதி வழங்கவில்லை'' என்று அவர் கூறி கை கழுவிவிட்டார்.
எனவே இப்போது, பாபு மீதுதான் காவல்துறை பார்வை திரும்பியுள்ளது. பாரா சைலிங் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடந்த 5 வருடங்களில், தமிழகம் முழுக்க 60க்கும் மேற்பட்ட பாரா சைலிங் நடத்தியுள்ளதாகவும், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த பல நூறு மாணவர்கள் மட்டுமின்றி, சில மாவட்டங்களில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளும் இதில் பறந்து சாகசம் செய்ததாகவும் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications