மாணவி முன் துணியே இல்லாமல் நின்ற கல்லூரி சேர்மேன்.. ஆட்சியர் விசாரணை.. அடுத்தடுத்த திருப்பங்கள்
அருப்புக்கோட்டை: நர்ஸிங் கல்லூரி மாணவிக்கு வீடியோ கால் போட்டு உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் அக்கல்லூரி சேர்மேன் தாஸ்வின் ஜான் கிரேஸ் விவகாரம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் ஆட்சியர் மேகநாத ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.
அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த கல்லூரியின் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் (38). இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

போராட்டம்
அந்த வீடியோ தற்போது அங்கு பயின்று வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல்லூரி மூடப்பட்டிருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி கட்டணம்
மாணவிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். கல்லூரி கட்டணத்தையும் சான்றிதழ்களையும் திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

மறியலை கைவிட்ட மாணவிகள்
இதையடுத்து அந்த மாணவிகளிடம் டிஎஸ்பி சகாய ஜோஸ், வட்டாட்சியர் அறிவழகன், அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

ஆட்சியர் விசாரணை
இதைத் தொடர்ந்து கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் என 2 பிரிவுகளின் கீழ் அருப்புக் கோட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து தாஸ்வின் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகளிடம் விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications