9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கலெக்டர் அலுவலக ஊழியர் - கைது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சையில் கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை டேனியல் தாமஸ் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் என்கிற தேவசகாயம். முன்னாள் ராணுவ வீரரான இவர் நாகை கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

collector office worker arrested for rape case

இவருடைய வீட்டிற்கு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சென்றபோது, அவரிடம் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்ட மாணவி சில நாட்களாக சோர்வாக காணப்பட்டார். அப்போது அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, தேவசகாயம் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறினார்.

இதையடுத்து பள்ளி மாணவியை தேவசகாயம் பாலியல் பலாத்காரம் செய்ததாக தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து, தேவசகாயத்தை கைது செய்தார். மேலும் மருத்துவ பரிசோதனைக்காக மாணவி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+