கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை... மரணத்திற்கு காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்திற்கான காரணங்கள் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை தனியார் கல்லூரி மாணவியில் படித்து வந்த மாணவி ஷைனி சரண்பிரியா தற்கொலை செய்து கொண்டது ராயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்.
மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications