அண்ணா சாலையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்: 3 விரல்கள் துண்டாகின
சென்னை: சென்னை அண்ணா சாலையில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டது.
சென்னை எர்ணாவூர் பாரதி நகர் 2வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சக்ரவர்த்தி(18). நந்தனத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் திங்கட்கிழமை மாலை கல்லூரி முடிந்த பிறகு நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் ஏறி அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கினார்.
அவர் இறங்கி நடந்ததும் அதே பேருந்தில் இருந்து இறங்கிய 4 பேர் அவரின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அவர் தலையில் வெட்டு விழாமல் இருக்க கையை வைக்க அவரது இடது கையில் வெட்டு விழுந்து 3 விரல்கள் துண்டாகிவிட்டன.
இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்து அலறினர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதற்கிடையே இது குறித்து தகவ்ல கிடைத்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் சக்ரவர்த்தியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரது விரல்கள் துண்டானதால் அதை ஒட்டுவதற்காக அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சக்ரவர்த்தி வெட்டப்பட்டதற்கு கல்லூரி பிரச்சனை அல்லது காதல் பிரச்சனை காரணமா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications