பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் மீது மணல் டிராக்டர் ஏறி பரிதாபச் சாவு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: பேரளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் மீது மணல் டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் மற்றும் பரதன். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பைக்கில் வந்தபோது, எதிரே வந்த வாகனம், பைக்கின் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.

College students met with an accident and died there itself

அவர்கள் கீழ்வே விழுந்த சில நொடிகளில் எதிரே வந்த மணல் டிராக்டர் இருவர் மீதும் மோதியதில், பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two college student met with an accident when they went in the bike. When the students fell down a sand tractor traveled on them and they died there itself.
Please Wait while comments are loading...