அதிமுகவுக்காக பிரச்சார பீரங்கியான கழிவறையை சுத்தம் செய்யும் நடிகை

நடிகை வாசுகி அதிமுக வேட்பாளர்களுக்காக பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் நேற்று இரவு 9 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசல் அருகே அத்தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
நடிகை வாசுகியை எதிர்பார்த்து பிரச்சாரம் நடக்கும் இடத்தில் அதிமுகவினரும், பத்திரிக்கையாளர்களும் மட்டுமே இருந்தனர். நடிகை யார் என்பது தெரியாததால் மக்கள் கூட்டம் இல்லை.
இந்நேரத்தில் வாசுகி திறந்த ஜீப்பில் அங்கு வந்தார். அப்போது அவர் பேசுகையில்,
எம்.ஜி.ஆர்.
யார் இந்த நடிகை வாசுகி என்று தானே நினைக்கிறீர்கள். நான் காரைக்குடியைச் சேர்தவள். நான் 6 மாத குழந்தையாக இருக்கையில் வள்ளுவரின் மனைவி வாசுகியின் பெயரை எனக்கு வைத்தவரே எம்.ஜி.ஆர். தான்.
வேலை கிடைச்சுடுச்சு
வேலை கிடைச்சுடுச்சு என்ற படத்தில் நான் டிப்டாப்பாக சேலை கட்டி, தலைநிறைய பூ வைத்து, கையில் குடையை பிடித்துக் கொண்டு கருப்பு நிற கண்ணாடியை அணிந்து பள்ளிக்கூடத்திற்குள் செல்வேன்.
கவுண்டமணி
நான் ஆசிரியை என்று நினைத்து கவுண்டமணி என்னை காதலிக்க முயற்சிப்பார். ஆனால் நான் பள்ளிக்கூடத்திற்குள் சென்ற உடன் உடையை மாற்றி அங்குள்ள கழிவறையை சுத்தம் செய்வேன். இப்போ என்னை அடையாளம் தெரிகிறதா?
கூட்டம்
வாசுகி தான் யார் என்று கூறி கருப்பு கண்ணாடியை அணிந்து காட்டியதும் மக்கள் கூட்டம் அவரது பேச்சைக் கேட்க கூடிவிட்டது. ஆனால் அவர் எதிர்கட்சி தலைவர்களை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியது மக்களை முகம் சுழிக்க வைத்தது.
சாதனைகள்
அதிமுக அரசின் சாதனைகளை பாட்டியலிட்டு செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறு வாசுகி கேட்டுக் கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் கழிவறையை சுத்தம் செய்யும் நடிகை என்னை தெரிகிறதா என்று கேட்டு வருகிறார் வாசுகி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications