புதிய கூட்டணிக்கு அச்சாரமா? ஒரே மேடையில் கருணாநிதி, தா. பாண்டியன், முத்தரசன் !
சென்னை: உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தா.பாண்டியன், முத்தரசன் ஆகியோர் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மகள் பிரீத்தி- விக்னேஷ் திருமணம் சென்னை கலைஞர் அரங்கில் இன்று காலை நடந்தது. திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தா.பாண்டியன், முத்தரசன், காங்கிரஸ் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது: உடல் நலம் இல்லாவிட்டாலும் மனநலம் இருப்பதால் மணமக்களை வாழ்த்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். திருமண விழாக்களில் கூறப்படும் கருத்துக்கள், மணமக்களுக்கு மட்டுமல்ல, மணமக்களாக நாளை வர இருப்பவர்களுக்கும் பயன்பெறுவதாக அமைய வேண்டும். அந்த வகையில், பாடுபடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள், தமிழர் இல்ல நிகழ்ச்சிகளாக நடைபெற பாடுபடும் இயக்கம் திராவிட இயக்கம். இதை கட்டிக்காக்க, வளர்க்க நாம் பாடுபட்டு வருகிறோம். தமிழர்கள் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளில் இருந்தாலும், எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு, பாடுபட்டு பணியாற்ற வேண்டும். அப்போதுதான், நம் கொள்கைகளை நிறைவேற்ற முடியும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
திருமண விழாவில் தா.பாண்டியன் பேசுகையில், தஞ்சாவூர் என்றும் தலைமையை விட்டு தந்ததில்லை. தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியமாகும். தஞ்சைதான் என்றும் ஆண்டு கொண்டிருக்கும். எங்கள் இயக்க தலைவரும் தஞ்சாவூர்காரர்தான். ஆற்றல் படைத்தவர்களின் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது செய்திதாள் போன்றது.
அது கடைக்கு சென்று விடும். ஆனால், படைப்புகள் காலம் கடந்து நிற்கும். நாங்கள் பொறாமை கண்ணுடன் பார்ப்பது, உடன் பிறப்பே என்று 70 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதும் கருணாநிதியைத்தான். அவரது அரசியல் எங்களுக்கு பாடம். அரசியலில் நாங்கள், முரண்பட்டாலும், கருணாநிதியை என்றும் மறப்பதில்லை என்றார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேமுதிக, மதிமுக, தமாகா, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதிலும், 2016 தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய சோதனையாக அமைந்துவிட்டது.
தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இடதுசாரிகள் இடம் பெறாத தேர்தலே கிடையாது. அந்த அளவுக்கு நீக்கமற இருந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பலரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சி உள்ளது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், முத்தரசன் ஆகியோர் ஒரே மேடையில் கருணாநிதியுடன் திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளது வரும் உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணிக்கு அச்சாரமா அமையலாம் என கருதப்படுகிறது. என்னதான் திமுக மீது தா.பாண்டியன் கடுமையான விமர்சனங்களை வைத்தாலும், தற்போதைய அவரின் பேச்சு புதிய கூட்டணிக்கு அச்சாரமாக அமையலாம் என கருதப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications