Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஒத்த’ சீட்டுக்காக மொத்தமாகக் காத்திருக்கும் குட்டிக் கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரிய கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையாத நிலையில், 10க்கும் மேற்பட்ட சிறிய கட்சித் தலைவர்கள் தங்களுக்கு ஒரு சீட்டாவது கிடைக்குமா என பெரிய கட்சிகள் மீது எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, பொதுக்கூட்டங்கள் என கட்சிகள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகின்றன.

தற்போதைய சூழலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி போன்ற கூட்டணிகள் உறுதியாகியுள்ளன. பாமகவும், தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக தேமுதிக பின்னால் சுற்றிக் கொண்டிருந்த பாஜக, விஜயகாந்தின் முடிவால் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதிமுகவோ கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து வாயே திறக்காமல் மவுனம் காத்து வருகிறது.

யாருடன் கூட்டணி...

யாருடன் கூட்டணி...

இப்படியாக பெரிய கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க, தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஜாதி மற்றும் சிறு கட்சிகள் யாருடன் கூட்டணி என்பதை இன்னமும் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளன.

கடைசி நேரத்திட்டம்...

கடைசி நேரத்திட்டம்...

காரணம் மற்ற பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனால் சின்னச் சின்ன கட்சிகளைக் காக்க வைத்து கடைசி நேரத்தில் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் திட்டமாம்.

பேரம் பேச இயலாது...

பேரம் பேச இயலாது...

இப்படிச் செய்வதால் அந்த கட்சிகளால் பேரம் பேச இயலாது என கருதுகிறதாம் பெரிய கட்சிகள். இதனால், இந்தத் தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்குமா என சிறிய கட்சித் தலைவர்கள் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

ஒரு சீட்டாவது...

ஒரு சீட்டாவது...

அதோடு, தமிழகத்தில், ஜாதிக்கு ஒரு கட்சி மட்டுமல்லாது, ஒரு ஜாதிக்கு, நான்கைந்து கட்சிகள் கூட இருக்கின்றன. தேர்தலில் தங்களது கட்சி சார்பில் எப்படியும் ஒரு சீட்டாவது பெற்றுவிட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய நோக்கம்.

இசக்கிமுத்து...

இசக்கிமுத்து...

கடந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பிரபலமான, சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலர் இசக்கிமுத்துக்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தற்போது அவர் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தில் இருந்து வெளியேறி, பசும்பொன் மக்கள் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இந்தத் தேர்தலில் தனது புதிய கட்சி சார்பில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இசக்கி முத்து. கூடவே ஒரு சீட்டுக்காக அவர் காத்தும் இருக்கிறார்.

சேதுராமன்...

சேதுராமன்...

இது ஒருபுறம் இருக்க சேதுராமன் தலைமையிலான கட்சியினர், அதிமுக, திமுக, பாஜக என, மூன்று தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். எந்த கட்சி, அதிக இடம் தருகிறதோ, அதில் சேருவதற்கு சேதுராமன் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக்...

கார்த்திக்...

இதேபோல், பிரபல நடிகரான கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, லோக்சபா தேர்தலின் போது காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. தற்போது சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், கார்த்திக் நேரடியாக திமுகவுடன் பேசிவருவதாகத் தெரிகிறது.

பார்வர்டு பிளாக் கட்சி...

பார்வர்டு பிளாக் கட்சி...

இதுதவிர சந்தானம் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சி, லோக்சபா தேர்தலில், திமுகவை ஆதரித்தது. ஆனால், கதிரவன் எம்.எல்.ஏ., தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சி, அதிமுக அணியில் நீடிக்கிறது.

புதிய தமிழகம்...

புதிய தமிழகம்...

இதேபோல், ஜான் பாண்டியனின் தமிழகமக்கள் முன்னேற்றக் கழகம்; கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் கடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்தன. லோக்சபா தேர்தலின் போது இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவோடு இணைந்தது புதிய தமிழகம். தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, குறைந்த ஓட்டுகள்வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார். தற்போதும் திமுகவின் அழைப்புக்காக அக்கட்சி காத்திருப்பதாகத் தெரிகிறது.

ஜான் பாண்டியன்...

ஜான் பாண்டியன்...

இதே நிலைமை தான் ஜான் பாண்டியனின் கட்சிக்கும். ஒருமுறை அவர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதோடு சரி, ஆனால், இம்முறை அக்கட்சி அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்பது ஜெயலலிதாவின் கூட்டணிக் கட்சிகள் அறிவிப்பில் தான் தெரியவரும்.

கொங்கு கட்சிகள்..

கொங்கு கட்சிகள்..

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற, கவுண்டர் சமுதாயத்தில் தற்போது நான்கு கட்சிகள் உள்ளன. ஆளுங்கட்சி கூட்டணியில் தொடரும், தனியரசுக்கு ஒரு, 'சீட்' மீண்டும் கிடைக்குமா என்பது தான், அவரது தலைமையிலான கட்சியின் ஒரே எதிர்பார்ப்பு. ஆனால், அதற்கு போட்டியாக அதே சமூகத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகளும் அதிமுகவிற்காகக் காத்துக் கிடக்கின்றனர்.

மூவேந்தர் முன்னணி கழகம்...

மூவேந்தர் முன்னணி கழகம்...

ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணி கழகம், கடந்த சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இருந்தது. தற்போது அதிமுக கூட்டணியில் சீட் கேட்டு காத்திருக்கிறது.

வேல்முருகன்...

வேல்முருகன்...

வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி, பூவை ஜெகனின் புரட்சி பாரதம் கட்சி போன்றவை லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது. தற்போதும் அதே கூட்டணியில் இருக்கவே அவை விரும்புகின்றன. முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமியின் சமத்துவ மக்கள் படை, எந்த கூட்டணியில் சேருமோ தெரியவில்லை.

ஒரு சீட் கனவு...

ஒரு சீட் கனவு...

இப்படியாக 10க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள், தேர்தலில் எப்படியாவது பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட வேண்டும், ஒரு தொகுதியிலாவது தேர்தலில் போட்டியிட்டுவிட வேண்டும் என போராடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+