வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார் எச்.ராஜா- தமிழக மக்கள் ஜனநாயக கட்சி புகார்
வன்முறையை தூண்டும் விதமாக பேசிவரும் எச்.ராஜா மீது நடவடிக்கை தேவை என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: தந்தை பெரியாருக்கு எதிராக பேசி வரும் பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியில் கடந்த 19ம் தேதி நள்ளிரவு பெரியாரின் சிலை உடைக்கபட்டது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கண்டன தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையுடுத்து 20 தேதி மாலை பெரியாரின் சிலையை உடைத்த வழக்கில் புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த சத்திஸ்கரில் சிஆர்பிஎப்ல் பணிபுரியும் தலைமை காவலர் செந்தில்குமார் கைது செய்து சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
இந்நிலையில் பெரியாரின் சிலை உடைப்பை நற்செய்தி என புதுக்கோட்டை மாவட்டம் வானக்கன்காடை சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச்செயலாளர் கற்பகவடிவேல் முகநூலில் பதிவிட்டிருந்தார்
இதனால் பெரியார் சிலை உடைப்பிற்கும் கற்பக வடிவேலுக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் புகார் மனு அளித்தனர்.
அதேபோல, தந்தை பெரியாருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பேசி வரும் பாஜக தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications