தேர்தல் நடத்தை விதிமீறல்: அமைச்சர் வளர்மதி மீது தேர்தல் அலுவலரிடம் திமுக மனு
சேலம்: திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை தனிப்பட்ட முறையில் திட்டிய அமைச்சர் வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட திமுகவினர், தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தி.மு.க.,வின் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கண்காணிப்பாளர் ஆர்.டி.ஓ., விஜய்பாபுவை சந்தித்து அமைச்சர் வளர்மதி மீது புகார் கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 17-ந் தேதி சேலம் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி பேசினார். அவர் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறும் வகையில் பேசி உள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி அவதூறாக பேசி உள்ளார். அவன், இவன், சில்லரை, தேவாங்கு, சோளக்காட்டு பொம்மை போன்ற அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.
தேர்தல் விதிமுறைகளின்படி ஒருவரை பற்றி அநாகரீகமாக பேசக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அமைச்சர் வளர்மதி தேர்தல் விதிகளை மீறி பேசி உள்ளார். அவர் பேசியதற்கான சி.டி. ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் உள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications