மாணவி வளர்மதிக்கு நிபந்தனை ஜாமீன்.. சேலம் முதன்மை நீதிமன்றம் வழங்கி உத்தரவு

மாணவி வளர்மதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாணவி வளர்மதிக்கு நிபந்தனை ஜாமீன்..

    சேலம்: பொதுமக்கள் போராட்டத்திற்கு தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு தங்களது நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

    Conditional bail to Student Valarmathi

    அதன்படி, சேலம் வீராணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் 8 வழி சாலைக்கு நிலம் அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக பணிக்கு சென்ற அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    அப்போது, அவர்களுக்கு ஆதரவாக பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி பேசினார். இதனையடுத்து, பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக வளர்மதியை வீராணம் போலீஸார் கடந்த 19-,ம் தேதி கைது செய்தனர்.

    இந்நிலையில் மாணவி வளர்மதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சேலம் முதன்மை நீதிமன்றம் இந்த நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது. அதன்படி மாணவி வளர்மதி தினமும் வீராணம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+