காங். தொகுதிப் பங்கீட்டு குழு இன்று அல்லது நாளை அறிவிப்பு: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவது குறித்து கட்சி தலைமையிடம் பேசுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றார்.

பின்னர் சென்னை வந்த அவருக்கு அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழுவை காங்கிரஸ் மேலிடம் இன்று அல்லது நாளை அறிவிக்கும். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications