தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசுவோம்- கருணாநிதியை சந்தித்த பின்னர் குலாம்நபி ஆசாத் தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்வதற்காக கருணாநிதியை சந்திக்க குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வருகை தந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் இருவரையும் வரவேற்றனர். முதலில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத்தும் முகுல் வாஸ்னிக்கும் பின்னர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்க சென்றனர்.
கோபாலபுரம் சென்ற குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்கை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கருணாநிதியை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு, கனிமொழி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவினரும் பங்கேற்றனர்.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது 25 தொகுதிகளே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜி.கே. வாசன் தனிக்கட்சியை தொடங்கி வெளியேறிவிட்டதால் காங்கிரஸுக்கு குறைந்த இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது திமுக. இருப்பினும் தேமுதிக கூட்டணியில் இடம்பெறாததால், அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கருணாநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்; தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய இன்னும் சிறிது காலம் ஆகும் என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications