வேட்புமனு தாக்கல் முடியும் நேரத்தில் தென் சென்னை வேட்பாளரை 'கண்டுபிடித்தது' காங்கிரஸ்!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிய சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில் தென் சென்னை தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி ஒருவழியாக அறிவித்துவிட்டது. தென்சென்னையில் எஸ்.வி. ரமணி போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். ஆனால் தென் சென்னை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அக்கட்சியால் கண்டு பிடிக்க முடியாமல் தத்தளித்தது.

காங்கிரஸ் கட்சியின் மயிலை பெரியசாமி, ராஜாஜியின் பேரன் கேசவன் ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிட விரும்பினர் .ஆனால் காங்கிரஸ் கட்சியோ திடீர் கூட்டாளியான நடிகர் கார்த்திக்குத் தள்ளிவிட முயன்றது.
அதே நேரத்தில் நடிகை நமீதாவையும் இறக்கிவிடலாம் ஒரு கணக்குப் போட்டது. எதுவுமே காங்கிரஸுக்கு கை கொடுக்கவில்லை. வேட்பு மனுத்தாக்கல் முடிவடையும் நேரம் என்பதால் வேறுவழியில்லாமல் எஸ்.வி. ரமணி என்பவரை தென் சென்னை வேட்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.
அதேபோல் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் என்பவரையும் வேட்பாளராக அறிவித்துள்ளார் ஞானதேசிகன்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications