கட்சிக்காரங்க ஆதரவே வேண்டாம்.. இது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் விரக்தி!
கரூர்: லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உட்பட நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு காட்டி வருவதால் விரக்தியில் இருக்கிறாராம் வேட்பாளர் ஜோதிமணி.
கரூர் தொகுதியில் டெல்லி மேலிட செல்வாக்கில் சீட் வாங்கிவிட்டார் ஜோதிமணி. அத்துடன் தொகுதியில் கடந்த சில நாட்களாக வேட்பாளர் அறிமுக கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
ஆனால் கரூர் தொகுதி தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குடைச்சல் தாங்க முடியாமல் பெரும் குழப்பத்தில் தவித்து வருகிறார் ஜோதிமணி.

ரூ2,500 வைத்து என்ன செய்ய?
இதை வெளிப்படையாக காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்திலும் பேசி வருகிறார். கரூர் தாந்தோணி மலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜோதிமணி, என்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது என்று கொந்தளித்திருக்கிறார்.

பேங்க் சுப்பிரமணி மீது நடவடிக்கை
இதை கேட்ட நகர காங்கிரஸ் தலைவர் சுப்பன் ஜோதிமணியிடம் இருந்து மைக்கை பறித்தார். உடனே ஜோதிமணி இதற்கெல்லாம் காரணம் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தான், மேலிடத்தில் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வைக்கிறேன் என்றார்.

அடிதடி
இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் என்பவருக்கும் ஜோதிமணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடியாகிப் போனது.

ஆதரவே இல்லாமல் நிற்கிறேன்..
இப்போது எனக்கு மாவட்ட காங்கிரஸ் ஆதரவே வேண்டாம்.. அவர்களது ஆதரவே இல்லாமல் நான் தேர்தலை சந்தித்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே புலம்பி வருகிறாராம் ஜோதிமணி.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications