மு.க.அழகிரிக்கு போஸ்டர் மூலம் தூது விடும் காங்கிரஸ்
நெல்லை: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் மூலம் தூது விட்டு வருகின்றனர். நெல்லையில் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அழகிரியின் பிறந்தநாள் போஸ்டர்களால் மதுரை மாவட்ட தி.மு.க. கலைக்கப்பட்டது. அத்துடன் அழகிரி ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டனர்.
தி.மு.க.வில் ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையே நடக்கும் கோஷ்டி பூசலின் உச்சக்கட்டமாக மு.க. அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இதற்கு நியாயம் கேட்க கருணாநிதியின் வீட்டுக்கு சென்ற மு.க.அழகிரி கோபத்துடன் நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால் தி.மு.க. கோஷ்டி பூசல் விவகாரம் வீதிக்கு வந்தது. இந்த நிலையில், நெல்லை நகரம் முழுவதும் இன்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ராகுல் ரத்த தான இயக்கத்தை சேர்ந்தவருமான பிரம்மா இந்த போஸ்டரை ஒட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி கொடியின் வர்ணத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் அந்த போஸ்டரில் இருக்கும் வரிகள் அழகிரியை காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுப்பது போல அச்சிட்டு இருக்கிறது. இந்த போஸ்டரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
போஸ்டர் வாசகம்
ஊரிடத்தில் பகை என்றால் உறவிடத்தில் முறையிடலாம்!...
உறவிடத்தில் பகை என்றால் யாரிடத்தில் செல்வோம்!....
அழைக்கிற(ரி) இடத்திற்கு வா!
என்பதுதான் அந்த போஸ்டர் வாசகம். நெல்லையில் இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து











Click it and Unblock the Notifications