தமிழகத்தில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் 'டோட்டல் வாஷ்-அவுட்'!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் உறுதியாக தெரிவித்தனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் 39 தொகுதிகளிலும் தோல்வியடையும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

கூட்டணியில்லையே…
கடந்த 2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க திமுக தயாராக இல்லை. அப்போதே காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.

அச்சத்தில் தலைவர்கள்
தமிழகத்தில் தனித்துப் போட்டி என்ற உடன் பல தலைவர்கள் அஞ்சி பின்வாங்கினர். ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட தலைகள் போட்டியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

மகனை இறக்கிய ப.சி
தான் போட்டியிடாவிட்டாலும் தொகுதி தன் கையை விட்டு போய்விடக்கூடாது என்று நினைத்த ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் களமிறக்கினார்.

பிரசாரத்தில் இறங்கி ஜி.கே.வாசன்
அதேபோல மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் 39 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்காக சூறாவளி பிரசாரம் செய்தார்.

தனித்து போட்டிய தயக்கமில்லை
1997-இல் தனித்துப் போட்டியிட்டு 18 சதவீத வாக்குகளைப் பெற்றோம். 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 45 லட்சம் வாக்குகளைப் பெற்றதோடு 27 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 1999-இல் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது 10 சதவீத வாக்குகள் கிடைத்தன என்று சாதனையை அடுக்கினார் வாசன்.

எதிர்பாராத வெற்றி கிட்டும்
அதேபோல லோக்சபா தேர்தல் முடிவுகள் எதிர்பாராத வெற்றியை பெற்றுத் தரும் என்று போகும் இடமெங்கும் கூறி வந்தார் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறிவந்தார்.

அடித்துச் சொன்ன கருத்துக்கணிப்புகள்
அதேசமயம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக்கணிப்புகள் அடித்துக் கூறின. சொன்னது போலவே காங்கிரஸ் கட்சி முட்டை வாங்கியுள்ளது.

குஜராத், ஜார்கண்ட்
தமிழ்நாடு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சி, குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்து வாஷ்அவுட் ஆகியுள்ளது.

டெல்லியில் முட்டை
அதேபோல தலைநகர் டெல்லியிலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வாஷ் அவுட் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications