"ஒன் மேன் ஆர்மி"யாக பா.ஜ.க.,வின் தூக்கத்தை கெடுத்த ராகுல்: ட்விட்டரில் குஷ்பு கருத்து!
ஒன் மேன் ஆர்மியாக பா.ஜ.க.,வின் தூக்கத்தை கெடுத்துள்ளார் ராகுல் காந்தி என்று ட்விட்டரில் குஷ்பு தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு பா.ஜ.க தலைவர்கள் தூக்கத்தை ராகுல் காந்தி கெடுத்து உள்ளதாக ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மற்றும் 14 தேதிகள் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க முன்னிலை வகித்து வந்தாலும், காங்கிரஸ் பெரும் போட்டியை கொடுத்து வருகிறது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க., காங்கிரஸிடம் இந்த முறை தடுமாறியே வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, குஜராத்தில் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு ராகுல்காந்தி பல பா.ஜ.க தலைவர்களின் தூக்கத்தை கெடுத்து உள்ளார் என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிகிறது. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸிற்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
One man @OfficeOfRG against the entire army of BJP..that is how the BJP saw the #GujaratElection2017 Congress is giving them sleepless nights n nightmares..we have shook them up..great going.
— khushbusundar (@khushsundar) December 18, 2017
சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல், குஜராத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரஸின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி உட்பட பலர் பிரச்சாரத்திற்கு வராத நிலையில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் மற்றும் தேர்தல் யுக்திகள் காங்கிரஸிற்கு இந்த முறை குஜராத்தில் கைகொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications