திமுகவுடன் கூட்டணி... 'சீட்டுக்காக' காங். தலைமை அலுவலகத்தில் குவிந்த கோஷ்டிகள்
சென்னை: திமுகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விருப்ப மனு கொடுக்க காங்கிரஸ் நிர்வாகிகள் திரள்வதால் அக்கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் 'ஜேஜே'வென களைகட்டியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிகாரத்தில் பங்குதரும் கட்சியுடன் கூட்டணி; இல்லையேல் தனித்தே போட்டியிடும்; ராகுல்காந்தியை முதல்வராக்குவோம் என ஏகத்துக்குமான சபதங்களை மேற்கொண்டுவந்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அத்தனை சபதங்களையும் குலாம்நபி ஆசாத்- கருணாநிதி சந்திப்பின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன் கைவிட்டுவிட்டார்.

கோஷ்டிகளும் கப்சிப்
"திமுக தலைமையில் ஆட்சி அமைப்பதுதான் இலக்கு; ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது இலக்கு அல்ல" ஒரே போடாக குலாம்நபி ஆசாத் போட்டுவிட்ட பிறகு இளங்கோவன் என்னதான் செய்ய முடியும்... திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியான பின்னர் இளங்கோவன் மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சியில் விருப்பமனுவை வாங்குவதையே புறக்கணிப்போம் என அறிவித்த அத்தனை கோஷ்டிகளும் தங்களது சபதத்தையும் கைவிட்டுவிட்டன.

திருவிழா கோலம்
திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி என சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்.... காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் நேற்று திருவிழா கோலமாக காட்சியளித்தது.

அத்தனை கோஷ்டிகளும் ஆஜர்
அதுவும் விருப்பமனுவையே வாங்கமாட்டோம்; விருப்ப மனு அறிவிப்பில் கோபண்ணா குளறுபடி செய்துவிட்டார் என்றெல்லாம் குறுக்குசால் ஓட்டிய அத்தனை கோஷ்டிகளின் நிர்வாகிகளும் விருப்ப மனு கொடுக்க வேர்க்க வியர்க்க காத்திருந்தனர்.

தவமாய் தவமிருந்து
குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான காங்கிரசார் குவிந்திருந்தனர். மற்ற கட்சிகளைப் போல அல்லாமல் காங்கிரஸில் விருப்ப மனு ரூ5,000தான்... இதனால் எப்படியாவது யாரையாவது பிடித்து சீட் வாங்கி தொகுதி கிடைத்துவிட்டால் எம்.எல்.ஏ.வாகிவிடும் என்ற பெருநம்பிக்கையோடு காங்கிரசார் சத்தியமூர்த்திபவனில் தவம் கிடந்ததையும் பார்க்க முடிந்தது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications