ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பதை எதிர்த்து காங்கிரஸார் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி உள்பட 15 பேர் கொலைக்கு நீதி கேட்டு சென்னையில் காங்கிரஸார் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் கொல்லப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதி கேட்டு, சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் அவர்களது விடுதலையை மாநில அரசு தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இந்த மூவருடன் நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால்,கொலையாளிகளான அவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசாங்கமும்,காங்கிரஸ் கட்சியும் கூறி வருகின்றன. மேலும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தையும் அணுகியுள்ளது. உச்சநீதிமன்றமும் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராஜீவ் காந்தி மற்றும் 15 தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என காங்கிராஸ் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி எதிரே நடந்த வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+