சுங்கச்சாவடியை நொறுக்கிய காங்கிரஸ் கட்சியினர்... மன்னிப்பு கேட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டோல்கேட் கண்ணாடியை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அடித்து நொறுக்கியதற்கு அக்கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்டதோடு தொண்டர்களை உடனடியாக கண்டித்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று மதுரையில் இருந்து 3 கார்களில் தொண்டர்களுடன் சென்றார். சின்னாளபட்டி சாலையில் கொடைரோட்டை அடுத்த டோல்கேட்டில் 3 கார்களும் நின்றன. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் காருக்கு கட்டண விலக்கு இருப்பதால், அவரது கார் செல்ல அனுமதிக்கப்பட்டது. மற்ற இரு கார்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் ஊழியர்கள் தெரிவித்தனர். கட்டணம் கட்ட முடியாது என தகராறு செய்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் டோல்கேட் அறை கண்ணாடியை உடைத்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு
இதனைக் கண்டு காரில் இருந்து இறங்கி வந்த இளங்கோவன், நீங்களே இப்படி செய்யலாமா என தொண்டரை கண்டித்ததுடன், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் மன்னித்து விடுங்கள் எனக் கூறினார். பின்னர் உடைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் வாகனங்களுக்கான கட்டணத்தை ஊழியர்களிடம் அவர் கொடுத்தார். பின்னர். அவர்களது கார்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
பாஜகவினர் அராஜகம்
முன்னதாக மதுரையில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்ற விழாவில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பாஜகவினர் ஒரு வேனில் சென்றனர்.அவர்களது வேனை கொடைரோடு 4 வழிச்சாலையில் உள்ள கட்டண வசூல் மையத்தில் ஊழியர்கள் நிறுத்தினர். ஆனால் வேனில் இருந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுத்தனர். இதனால் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களுடைய வேனுக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு உருவானது. இதையடுத்து ஊழியர்கள் அந்த வேனை அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த பரப்பரப்பு அடங்குவதற்குள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அதே இடத்தில் தகராறு செய்த சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து கட்டண வசூல் மைய ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications