காதலிக்க மறுத்தால் கொன்றுவிடுவேன்.. கல்லூரி மாணவியை மிரட்டிய கொத்தனார் கைது
கன்னியாகுமரி: தன்னை காதலிக்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரை போலீசார் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியாக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் நாகர்கோவிலில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த மாணவியை திருவத்துவபுரம் ஆயக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜெஸ்டின்ராஜ் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மாணவி பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

இந்நிலையில் மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த அவரை வழி மறித்த ஜெஸ்டின்ராஜ் அவரது செல்போன் எண்ணை கேட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும் கையை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி தனது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உடனடியாக களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஜெஸ்டின் ராஜை கைது செய்தனர்.
ஜெஸ்டின்ராஜ் மீது ஏற்கனவே அந்த மாணவியின் பெற்றோர் இரண்டு தடவை புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சுவாதி கொலை சம்பவத்திற்கு பிறகு அலர்ட் ஆகியுள்ள போலீசார் இப்போது துரிதமாக நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications